இந்தோனேசியாவில் தலைநகர்  ஜகார்த்தாவிலிருந்து சில வீதிகளில் 10 கிலோ மீற்றர் (6 மைல்கள்) வரை போக்குவரத்து நெரிசல்கள் உருவாகியுள்ளது.

இந்தோனேசியாவில் நோன்பு பொருநாள் விடுமுறை காரணமாக  பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

April 29, 2022, in this photo taken with a drone by Antara Foto. Antara Foto/Akbar Nugroho Gumay/via REUTERS

27 கோடி மக்கள் வசிக்கும் தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த இரண்டு ஆண்டுகள் பாரம்பரிய நடவடிக்கைக்கு அதிகாரிகள் தடை விதித்தனர்.

இந்நிலையில், இவ்வாண்டு உள்நாட்டில் "முடிக்" என்று அழைக்கப்படும் புலம்பெயர்ந்தோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் நடவடிக்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

எனவே பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் குவியத் ஆரம்பித்துள்ளனர்.

April 29, 2022, in this photo taken with a drone by Antara Foto. Antara Foto/Akbar Nugroho Gumay/via REUTERS

இம்மாத ஆரம்பத்தில், இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ டுவிட்டர் பக்கத்தில் குறைந்தது 7 கோடியே 90 இலட்சம் மக்கள் இந்த ஆண்டு நோன்பு பெருநாளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவதாகக் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனேசியா ஆசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தோனேசியா சமீபத்திய மாதங்களில் தொற்றுநோய்களின் கூர்மையான வீழ்ச்சிக்குப் பிறகு பல தொற்றுநோய் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.