இந்தியாவின் தெலுங்கானாவின் யாதாத்ரி- போங்கிர் மாவட்டத்தில் பழமையான கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் கட்டிடத்தின் கூரையின் கீழ் நின்று கொண்டிருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இச் சம்பவம்வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த பொலிஸார், உள்ளூர்வாசிகளின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் கட்டிடத்தின் உரிமையாளர், வாடகைக்கு குடியிருந்தவர் மற்றும் இரண்டு தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
