அம்பலாங்கொடை,  கல்துவ பகுதியில் நபர் ஒருவர் ரயிலில் மோதி தற்கொலை செய்துள்ளார்.

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த நபர் அக்குரஸ்ஸ, வில்பிட பகுதியைச் சேர்ந்தவர் (34 வயது) என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த நபரின் சடலம் பலபிடிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.