சீனாவில் 1,410 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் ; 47 மரணங்கள் பதிவு

By T. Saranya

30 Apr, 2022 | 10:25 AM
image

சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,410 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, 47  கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் 1,249 பேர் சங்காய் நகரிலும், மீதமுள்ள தொற்றாளர்கள்  பீய்ஜிங், குவாங்டாங் மற்றும் சிச்சுவான் உள்ளிட்ட 14  மாகாண அளவிலான பிராந்தியங்களில் பதிவாகியுள்ளன என   சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்ட உள்ளூர் தொற்றாளர்களில், 1,013 பேர் அறிகுறியற்ற தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உள்ளூர் தொற்றாளர்கள் தவிர, சீனாவில் 9,293 உள்ளூர் அறிகுறியற்ற தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவற்றில் 8,932 சங்காயில் பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 3,127  பேர் கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்துள்ளனர், அதே நேரத்தில் 26,567 பேர் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணி நேரத்தில் சங்காயில் 47 இறப்புகள் பதிவாகியுள்ளன, சீனாவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5,022 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சீனாவின் சங்காய் நகரில் நிலவும் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் உணவுப் பற்றாக்குறையால் மக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

நகரின்  கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் அதிகாரிகளால் பழைய உணவை விநியோகித்ததால், சங்காய் குடியிருப்பாளர்கள் சில உணவுப் பொருட்களை உட்கொண்ட பிறகு நோய்வாய்ப்பட்டுள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளில் நாட்டின் மிக மோசமான கொரோனா வெடிப்பை நகரம் மோசமாகக் கையாள்வது, அதிகாரிகள் மீது பொது அவநம்பிக்கையையும் அரசாங்கத்தின் மீது கோபத்தையும் எழுப்பியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right