ஜனாதிபதி - 11 கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பில் பொது இணக்கப்பாடு 

Published By: Digital Desk 4

30 Apr, 2022 | 07:33 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் உட்பட அமைச்சரவையை நீக்கி சகல கட்சிகளையும் உள்ளிடக்கிய வகையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார். இடைக்கால அரசாங்கம் தொடர்பில் சகல கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 11 கட்சிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத வகையில் அரச ஊழியர்கள் ஒன்று திரண்டு அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்கியுள்ளதை அலட்சியப்படுத்த முடியாது.ஆகவே எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்வது அவசியம் என  11 கட்சிகளின் தலைவர்களும் ஜனாதிபதியிடம் ஒன்றினைந்து வலியுறுத்தியுள்ளனர்.

இடைக்கால அரசாங்கம் தொடர்பிலான நகர்வினை முன்னெடுக்க 5 பேர் அடங்கிய குழு நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச,உதய கம்மன்பில.டிரான் அழஸ்,நிமல் சிறிபால டி சில்வா,அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியவுடன்,இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க தான் கொள்கை ரீதியில் உடன்படுவதாக குறிப்பிட்டு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ புதிய அரசாங்கத்தின் வியூகம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளுமாறு அரசாங்கத்திலிருந்து விலகி தற்போது பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் கட்சி தலைவர்களுக்கும்,ஆளும் தரப்பின் கட்சி தலைவர்களுக்கும் கடந்த புதன்கிழமை அழைப்பு விடுத்தார்.

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஆளும் தரப்பின் கட்சி தலைவர்களுடன் ஒன்றினைந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியாது.ஆகவே 11கட்சி தலைவர்களுடன் மாத்திரம் ஜனாதிபதி தனித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட வேண்டும் என 11 கட்சி தலைவர்கள் நேற்று முன்தினம் குறிப்பிட்டதை தொடர்ந்து ஆளும் தரப்பின் கட்சி தலைவர்களுக்கும்,ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று காலை இறுதி கட்டத்தில் இரத்து செய்யப்பட்டது.

11 பங்காளி கட்சி தலைவர்கள்,உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று காலை 10.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. நிதி மற்றும் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி,; முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில,விமல் வீரவன்ச,வாசுதேவ நாணயக்கார,டிரான் அழஸ்,கெவிந்து விஜயதுங்க,அசங்க நவரத்ன,வீரசிங்க வீரசுமன,அத்துரலியே ரத்ன தேரர்,திஸ்ஸ விதாரன,அனுர பிரியதர்ஷன யாப்பா,விஜயதாஸ ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இதன்போது ஆரம்பத்தில் கருந்துரைத்த ஜனாதிபதி நாட்டின் தற்போதைய அடிப்படை பிரச்சினை மற்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்வு திட்டங்களை தெளிவுப்படுத்தினார்.அரசாங்கத்தி;ற்கு எதிராக நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டம் உணர்ச்சிபூர்வமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைத்துறையினர் போராட்டங்களில் ஈடுப்படுகின்றனமை வரவேற்கத்தக்கது எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.சகல கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் பிரதமரை தெரிவு செய்யும் போது அதில் தான் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரையும்,அமைச்சரவையையும் நீக்கி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க தயார்.சர்வகட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்கள் ஒன்றினைந்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கிறங்கியுள்ளதை அலட்சியப்படுத்த முடியாது.அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறதே தவிர குறைவடையவில்லை.

எதிர்வரும் 6ஆம் திகதி பாரிய ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுப்பட தொழிற்சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.ஆகவே 6ஆம் திகதிக்கு முன்னர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு 11 கட்சி தலைவர்கள் ஜனாதிபதியி;டம் வலியுறுத்தியுள்ளார்கள்.

இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியலமைப்பின் 20ஆம் திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு,அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் துரிதகரமாக நிறைவேற்றப்பட வேண்டும்.அரசியலமைப்பு ஊடான மாற்றம் மக்களின் போராட்டத்தை சற்று தணிக்கும் எனவும் கட்சி தலைவர்கள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக ரயில் சேவைகள் தாமதம்

2023-12-06 16:57:59
news-image

வாள் உற்பத்தியாளர்களை  கைது செய்து சட்ட...

2023-12-06 16:46:21
news-image

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மன்னாரில்...

2023-12-06 16:24:13
news-image

மூவரின் உயிரிழப்புக் காரணமான தனியார் பஸ்...

2023-12-06 16:17:51
news-image

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் -...

2023-12-06 16:15:49
news-image

பரிசுப் பொருட்கள் மற்றும் கடன் வழங்குவதாக...

2023-12-06 16:42:40
news-image

ஹரக்கட்டாவின் மனுவை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு...

2023-12-06 15:44:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-12-06 15:35:11
news-image

எட்கா குறித்த பேச்சுவார்த்தைகளை மார்ச்சில் நிறைவு...

2023-12-06 16:49:08
news-image

கடுகண்ணாவ வைத்தியசாலையில் சுவரொன்று வீழ்ந்து பணியாளர்...

2023-12-06 15:18:09
news-image

கொழும்பு பாதுகாப்பு பேரவை உடன்படிக்கையில் கையெழுத்திட...

2023-12-06 15:09:10
news-image

நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன்...

2023-12-06 16:48:26