சுயாதீன உறுப்பினர்களிடம் இலங்கைக்கான இந்தியாவின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினார்  இந்திய உயர்ஸ்தானிகர் 

Published By: Digital Desk 4

29 Apr, 2022 | 09:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு ஆதரவாக செயற்படும் இந்திய அரசாங்கத்திற்கும்,இந்திய மக்களுக்கும் சுயாதீன பாராளுமன்ற குழுவினர் இதன்போது நன்றி தெரிவித்தனர்.

அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்த அமரவீர, நிமல்சிறிபாலடி சில்வா, தயாசிறி ஜயசேகர, உதயகம்மன்பில, லசந்த அழகியவன்ன ஆகியோருக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரம் குறி;த்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர்ஸ்தானிகருடன் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.

நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியாவினால் கிடைக்கப்பெற்றுள்ள ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது.இந்தியாவின்; நட்பு நாடு என்ற அடிப்படையிலும்,வரலாற்று ரீதியிலான உறவின் அடிப்படையிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியமானது என பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர்ஸ்தானிகரிடம் குறிப்பிட்டுள்ளனர்.இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை உயர்ஸ்தானிகர் இதன்போது வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41