நாட்டு மக்கள் மட்டுமன்றி உலகத்தின் பார்வையையும் ஈர்க்கும் சம்பவமாக இடம்பெற்ற மீரியபெத்தை மண்சரிவு இயற்கை அனர்த்தத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வீடு, கல்வி, தொழில் ஆகிய பிரச்சினைகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

காலங்கள் கடந்திருந்த போதும் தம் உறவுகளை இழந்த மக்கள் அந்த உறவுகள் எம்மோடு தான் இருக்கின்றார்கள் என்பதை மனதில் நிறுத்தி அமைத்து கொடுக்கப்பட்டுள்ள இந்த தனி வீட்டில் சுபீட்சமான வாழ்க்கையை வாழ வேண்டும் என ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு நேற்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)