டில்லியின் எல்லைப் பாதுகாப்பு படைக்கு சொந்தமான இராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எல்லைப் பாதுகாப்பு படைக்கு சொந்தமான இராணுவ விமானம் பக்டொலா பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து, விபத்து நடந்த பகுதிக்கு தீயணைப்பு படை வாகனங்கள் அனுப்பட்டுள்ளன.

 இன்று காலை சுமார் 9:50 மணியளவில் எல்லைப் பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானம் டெல்லி விமான நிலையம் அருகே சுவர் மீது மோதியது.

 முதலில் சுவர் மீது மோதிய அந்த விமானம், பின்னர் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டியின் மீது மோதியுள்ளது.

 இதைத் தொடர்ந்து, விமானத்தில் தீவிபத்தும் ஏற்பட்டுள்ளது. தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இந்த விமானத்தில் 10 முதல் 12 பேர் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.