(எம்.மனோசித்ரா)
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

மோதலுக்குப் பிந்தைய நல்லிணக்கம் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் அண்மையில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் பன்னாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
இதன் போது மோதலுக்குப் பிந்தைய நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மற்றும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றத்தையும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட கணிசமான திருத்தங்கள் மற்றும் பயங்கரவாதத்தின் சமகால பரிமாணங்களுக்கு ஏற்ப அதனைக் கொண்டு வருவதற்கு விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்தார்.
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி நடாத்திய சந்திப்பு, நிலம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதிகளின் பிரச்சினைகள் உட்பட வடக்கு , கிழக்கு மாகாண மக்களைப் பாதிக்கும் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் குறிப்பிட்டார்.
அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கையை சுட்டிக்காட்டிய அவர், விரிவான ஆலோசனைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
சிவில் சமூக அமைப்புக்களுடனான கூட்டுறவை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் தேசிய தன்னார்வத் தொண்டு நிறுவன செயலகத்தை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான சமீபத்திய தீர்மானம் ஆகியன குறித்து குறிப்பிடுகையில்,
அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களுடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொள்ளும் வழக்கமான உரையாடல் மற்றும் அவர்களின் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்கான அர்ப்பணிப்பு குறித்து அமைச்சர் பீரிஸ் தூதுவர்களுக்கு விளக்கினார்.
கடந்த ஆணைக்குழுக்களின் கண்டறிதல்கள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழிகளை மதிப்பிடுவதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் நிலைமை , அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை அரசியல் சாசனத்திற்கு அமைவாக எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM