இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் பந்து வீசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இலங்கை அணி சிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான அணியும் தெரிவுசெய்யப்பட்டு, குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் எஞ்சலோ மெத்தியுஸிற்கு சிம்பாப்வே தொடரின் போது பந்துவீசக்கூடாது என  வைத்திய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் மெத்தியுஸ் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.