சிரேஷ்ட  ஊடகவியலாளர் டி. சிவராமின் நினைவு தினத்தினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (29) மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வும் கவன ஈர்ப்புபோராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் வைக்கப்பட்டிருந்த சிவராமின் புகைப்படத்துக்கு அஞ்சலிசெலுத்தப்பட்டதுடன் மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து  மலர் வைக்கப்பட்டதுடன் மலர் மாலையும் போடப்பட்டது.

 அதனை தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டியும் நாட்டில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையினை கண்டித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படடடது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இராசாணக்கியன், கோவிந்தன் கருணாகரன் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜர சரவணபவன் பிரதி மேயர் சத்தியசீலன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் உட்பட மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் சமயத் தலைவர்கள்    ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.