இலங்கைக்கு தமிழகத்திலிருந்து அத்தியாவசிய பொருட்கள் அனுப்ப அனுமதி வழங்க வேண்டும் - இந்திய பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை

By T. Saranya

30 Apr, 2022 | 08:41 AM
image

கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தமிழகத்திலிருந்து அனுப்பிவைக்க உரிய அனுமதி வழங்க வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் மேலும் இதுதொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர் ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது அங்குள்ள மக்களுக்கு உருவாகிவரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.

இதுதொடர்பாக மார்ச் 31ஆம் திகதியன்று அவரை சந்தித்து நேரடியாக அளித்த கோரிக்கை மனுவில் இந்த பிரச்சனையை குறிப்பிட்டிருக்கிறேன். 

இலங்கையில் வாடும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றும் அதில் குறிப்பிட்டிருந்ததாக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ஏப்ரல் 15ஆம் திகதியன்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் முக ஸ்டாலின்  கடிதம் மூலமாகவும் அவருடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலிலும் வலியுறுத்தியிருக்கிறார். 

அதன்போது தமிழக அரசு இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களையும் உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசின் அனுமதி கோரி இருந்ததாகவும் ஆனால் இந்த கோரிக்கை குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு கிடைக்கப் பெறவில்லை என்றும் முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையே இலங்கையில் நிலவும் அமைதியின்மை மற்றும் மக்கள் அனுபவித்துவரும் சொல்லலாம் துயரங்கள் குறித்த செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருப்பதாகவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று அத்தியாவசிய பொருட்களையும் உயிர் காக்கும் மருந்துகளை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி தேவையான ஏற்பாடுகளை செய்து உரிய அனுமதிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவை சார்பில் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இந்த விபரத்தையும் தமிழக முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.‌

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தின் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுகளை தான் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டுள்ள முதல்வர் தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்கு உணவு அத்தியாவசிய பொருட்கள் மட்டும் உயிர்காக்கும் மருந்துகளை விரைவாக எடுத்துச் செல்வதற்கு உரிய அனுமதி வழங்குவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உடனடியாக வழங்குமாறு கோரியுள்ளார். 

மேலும் இது தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் மாண்புமிகு இந்திய பிரதமரின் கவனத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே 40 ஆயிரம் டன் அரிசி, 15 கோடி ரூபாய் பால்மா பொருட்கள், 28 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துப் பொருட்கள் என இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையை சேர்ந்த கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் உயிரிழப்பு

2023-02-06 04:17:44
news-image

சமூக ஊடக செயற்பாட்டாளர் கொழும்பு விமானநிலையத்தில்...

2023-02-06 03:55:04
news-image

சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த...

2023-02-05 17:43:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட...

2023-02-05 17:44:22
news-image

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின்...

2023-02-05 17:41:37
news-image

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது...

2023-02-05 17:32:24
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு 10...

2023-02-05 17:35:04
news-image

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக திங்கள்...

2023-02-05 14:39:41
news-image

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம்...

2023-02-05 18:01:18
news-image

ராஜபக்சவின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் -...

2023-02-05 17:21:35
news-image

தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு...

2023-02-05 17:18:20
news-image

கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில்...

2023-02-05 17:34:01