‘பெர்முடா முக்கோணம்’ நிலவிவந்த மர்மம் ; வெளியானது உண்மை (வீடியோ இணைப்பு)

Published By: Ponmalar

23 Oct, 2016 | 11:17 AM
image

பலகாலமாக நிலவிவந்த பெர்முடா முக்கோணம் தொடர்பான மர்மம் தற்போது நீங்கியுள்ளது. 

குறித்த பகுதியில் பயணிக்கும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் என்பன மாயமாய் மறைந்து உலக மக்களிடையே பீதியை உண்டாக்கின.

அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 5,00,000 சதுரடி பரப்பளவில் பெர்முடா முக்கோணம் அமைந்துள்ளது.

Miami, Puerto Rico மற்றும் பேர்முடா தீவுக்கிடையில் அமைந்துள்ள பிரதேசம் பெர்முடா முக்கோணம் என அழைக்கப்படுகின்றது. இப்பிரதேசத்துக்குள் செல்லும் விமானங்கள், கப்பல்கள் உட்பட எந்தவொரு சிறிய பொருள் கூட உள்நுழையமுடியாத அளவுக்கு இப்பிரதேசம் நீண்டகாலம் மர்மமான பிரதேசமாகவே இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இது தொடர்பாக அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவொன்று ஆய்வொன்றை மேற்கொண்டு இதற்கான  காரணத்தை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து ஸ்டீவன் மில்லர் என்ற ஆராய்ச்சியாளர் தனது கருத்துக்களை முன்வைத்தார், ‘பெர்முடா முக்கோணப்பகுதியில் நிகழும் மர்மத்திற்கு அங்குள்ள மோசமான காலநிலை தான் காரணம்’ என இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெர்முடா முக்கோணப் பகுதிக்கு மேலிருக்கும் மேகக்கூட்டங்கள் அறுகோண வடிவில் வினோதமாகக் காணப்படுவதாகவும், இவை 32 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை பரந்திருப்பதாகவும், இவையே அப்பிரதேசதில் வெடிகுண்டுச் சூறாவளியை உருவாக்கிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மேகத்தில் உருவாகும் இந்தச் சூறாவளிக் காற்றானது, 273 கிலோமீற்றர் வேகத்தில் கடலைநோக்கி வீசுவதால் அப்பிரதேசத்தில் பயணம் செய்யும் விமானங்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் கடலில் மூழ்கின்றன.

காற்று கடற்பரப்பின் மீது வேகமாக மோதும்போது சுமார் 45 அடி உயரத்திற்கு அலை எழுவதால் அவ்வழியாக செல்லும் கப்பலுக்கும் இதே நிலை ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்