இங்கிலாந்து செல்லும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் குழாம் விபரம் வெளியீடு

Published By: Digital Desk 4

28 Apr, 2022 | 05:20 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள  18 பேர் கொண்ட இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் குழாம் விபரத்தை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

எதிர்வரும் மே 6 முதல் 29 வரை இங்கிலாந்தில் விளையாடவுள்ள இலங்கை வளர்ந்து அணிக்கு இரண்டு அணித்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 4  நாட்கள் கொண்ட இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு நிப்புன் தனஞ்சயவும், இருபதுக்கு 20 அணிக்கு தனஞ்சய லக்சானும் அணித்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டிருந்த கழக மட்ட வளர்ந்து வரும் அணிகளுக்கிடையிலான தொடரில் சிறந்த ஆற்றல்களை வெளிக்காட்டிய வீரர்கள் பலருக்கும்  இங்கிலாந்துக்கு பயணமாகவுள்ள இலங்கை வளர்ந்துவரும் குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இந்த அணியில் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்களாக தனஞ்சய லக்சான் மற்றும் அஷேன் பண்டார ஆகியோரை அடையாளப்படுத்த முடியும்.

அவிஷ்க பெரேரா, லசித் குருஸ்புள்ளே, நிஷான் மதுஷ்க, நுவனிந்து பெர்னாண்டோ, அவிஷ்க தரிந்து, அஷேன் பண்டார மற்றும் நிபுன் தனஞ்சய ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக இக்குழாமில் இடம்பிடித்துள்ளனர்.

இவ்வணியில் பிரதான சுழற்பந்துவீச்சாளர்காக அஷெய்ன் டேனியல், திலும் சுதீர மற்றும் துனித் வெல்லாலகே ஆகிய மூவரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தோஷ் குணதிலக,யசிரு ரொட்ரிகோ, தனஞ்சய லக்சான், மானெல்கர் டி சில்வா ஆகியோர் சகலதுறை வீரர்களாக அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், நிபுன் மாலிங்க, அம்ஷி டி சில்வா, நிபுன் ரன்சிக்க, உதித் மதுஷான் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாக உள்ளனர். 

இலங்கை வளர்ந்து வரும் குழாம் எதிர்வரும் முதலாம் திகதியன்று இங்கிலாந்து நோக்கி பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை வளர்ந்து வரும் குழாம் விபரம்

நிபுன் தனஞ்சய ( 4 நாட்கள் அணித் தலைவர்), தனஞ்சய லக்சான் (இருபதுக்கு 20 அணித் தலைவர்), லசித் குருஸ்புள்ளே, அவிஷ்க பெரேரா, சந்தோஷ் குணதிலக, அவிஷ்க தரிந்து, நுவனிந்து பெர்னாண்டோ , நிஷான் மதுஷ்க, அஷேன் பண்டார , துனித் வெல்லாலகே, திலும் சுதீர, அஷெ்ய்ன் டேனியல் , நிபுன் மாலிங்க, நிபுன் ரன்சிக்க, மானெல்கர் டி சில்வா, யசிரு ரொட்ரிகோ , உதித் மதுஷான் , அம்ஷி டி சில்வா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணை வரவேற்பு நாடான மேற்கிந்தியத் தீவுகளை...

2024-06-24 11:10:52
news-image

அமெரிக்காவை நையப்புடைத்து வெற்றியீட்டிய இங்கிலாந்து முதலாவது...

2024-06-24 09:21:09
news-image

ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு...

2024-06-23 18:52:47
news-image

பெட் கமின்ஸ் அடுத்தடுத்த போட்டிகளில் ஹெட்-ட்ரிக்;...

2024-06-23 10:11:07
news-image

பங்களாதேஷை வீழ்த்தி உலகக் கிண்ண அரை...

2024-06-23 05:39:40
news-image

ரி20 உலகக் கிண்ண அரை இறுதிச்...

2024-06-22 19:31:12
news-image

விதிகளை நடைமுறைப்படுத்துவதில் ஐ.சி.சி. இரட்டை வேடம்...

2024-06-22 16:33:52
news-image

கண்டி ஒலிம்பிக் தின கொண்டாட்டத்தில் ஆயிரத்துக்கும்...

2024-06-22 16:16:27
news-image

சேஸ் பந்துவீச்சிலும் ஹோப் துடுப்பாட்டத்திலும் அசத்தல்;...

2024-06-22 11:11:48
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடிப்புச் செய்த இலங்கை...

2024-06-22 10:19:13
news-image

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் உதவித்...

2024-06-22 00:37:19
news-image

குவின்டன் டி கொக், டேவிட் மில்லரின்...

2024-06-22 00:06:34