ரம்புக்கனை துப்பாக்கிப் பிரயோகம் : நீதிமன்றின் கைது உத்தரவை அடுத்து சுகயீனமடைந்த பொலிஸ் குழுவினர் வைத்தியசாலைகளில் அனுமதி

28 Apr, 2022 | 04:54 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கேகாலை மாவட்டம் - ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை  துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்ள உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரியையும், அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட பொலிஸ்  உத்தியோகத்தர்களையும் உடனடியாக கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்ய கேகாலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கைதாகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் திடீர் சுகயீனமுற்றுள்ளதாக அறிய முடிகிறது.

Sri Lanka: Photographic evidence shows police violence and shooting an  unarmed lonely protester in Rambukkana • Sri Lanka Brief

இந்த துப்பாக்கிச் சூட்டினை நடாத்த உத்தரவிட்டவர், கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கீர்த்திரத்ன என கடந்த 22 ஆம் திகதி கேகாலை நீதிவான் வாசனா நவரட்ன முன்னிலையில், அவரால் வழங்கப்பட்ட சாட்சியம் ஊடாக உறுதி செய்யப்பட்ட நிலையில்,  தற்போது அந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உள்ளக தகவல்கள் தெரிவித்தன. 

தொடர்ச்சியாக தனக்கு வாந்தி வருவதாக தெரிவித்து அவர் இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதியாகியுள்ளதாக அந்த தகவல்கள் கூறின.

இதனைவிட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் உத்தரவை நடைமுறைப்படுத்திய, துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய உதவி பொலிஸ் அத்தியட்சர் தர்மரத்ன உள்ளிட்ட  6 பொலிஸார் குண்டசாலை பொலிஸ்  வைத்தியசாலையில் பல்வேறு  சுகயீன நிலைமைகலைக் கூறி சிகிச்சைகளுக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் சி.ஐ.டி. எனும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காவிந்த பியசேகரவின் மேற்பார்வையில் பொலிஸ் அத்தியட்சர்  மொஹான் லால் சிறிவர்தனவின் வழி நடாத்தலின் கீழ்,   பிரதான பொலிஸ் பரிசோதகர்  கருணாதிலக தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 இந் நிலையில் எதிர்வரும் மே 2 ஆம் திகதி ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை  துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்தமை மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்த  பீ 2424/ 2022 எனும் இலக்கத்தை உடைய வழக்கு நீதிவான்  வாசனா நவரட்ன முன்னிலையில் விசாரணைக்கு வரும் நிலையில், அப்போது இந்த  7 பேரையும் கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00