தம்­ப­திகள் பலர் குழந்தைப் பாக்­கி­யத்தை வென்­றெ­டுக்க  சிகிச்­சை­களை நாடு­வது வழ­மை­யா­கி­விட்­டது. இத்­த­கைய தரு­ணத்தில் தம்­ப­திகள் சரி­யான  பாதையில் தீர்வை நோக்கி செல்ல வழி­மு­றைகள் என்ன? சிகிச்­சைகள் பல இடங்­களில்  எமது நாட்­டிலும் சரி அயல் நாட்­டிலும் சரி வழங்­கு­வ­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.  ஆனால் தம்­ப­தி­களின் குழந்­தைப்­பாக்­கி­யத்தை தாம­தப்­ப­டுத்தும் காரணம் சரி­யாக  அறி­யப்­ப­டு­கின்­றதா? அல்­லது தம்­மிடம் வந்து விட்­டார்கள், இவர்­க­ளுக்கு IVF  சிகிச்­சையை செய்து பார்ப்போம், சரி வருமோ? சரி­வ­ராதோ? பற்றி யோசிக்க  நேர­மில்லை என்ற போக்கு கடை­ப்பி­டிக்­கப்­ப­டு­கின்­றதா? என்­பது தான் முக்­கி­ய­மாக  பார்க்க வேண்­டி­யுள்­ளது.  

பல இடங்­களில் சென்று அவ­சர அவ­ச­ர­மாக IVF சிகிச்சை செய்து  பார்த்து விட்டு, சரி­வ­ர­வில்­லையே என்று கவ­லைப்­ப­டு­ப­வர்­களும்  வேத­னைப்­ப­டு­வர்­களும் நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்ணம் உள்­ளனர். இவர்­க­ளது  நிலைமை குழந்­தைப்­பாக்­கியம் இல்லை என்­றாலும் பல செல­வுகள்,  பண­வி­ர­யங்கள் செய்து IVF சிகிச்­சையும் செய்து குழந்தைப் பாக்­கியம் இல்லை  என்ற கவலை. இவ்­வாறு ஏற்­க­னவே வேத­னையில் இருப்­ப­வர்­களை மேலும்  வேத­னைப்­ப­டுத்தும் செய­லாக தோல்­வி­ய­டையும் IVF சிகிச்சை மாறி­வ­ரு­கின்­றது. ஒரு  சிலர் IVF செய்து வெற்­றி­ய­டைந்­தார்கள். ஆனால் கூடு­த­லா­ன­வர்கள் பல தட­வைகள் IVF  செய்தும் தோல்­விதான் முடி­வா­கின்­றது.   

இந்த நிலைமை ஏன் ஏற்­ப­டு­கின்­றது என சற்று ஆராய்ந்து பார்த்து  இதற்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு உதவ வேண்­டிய தேவையும் சேவையும் உள்­ளன. IVF செய்யும்  இடங்கள் தமக்கு வரும் தம்­ப­தி­களின் எண்­ணிக்­கையை நாளுக்கு நாள்  கூட்­டிக்­கொள்­வதும் மற்­றைய சிகிச்சை நிலை­யங்­க­ளுடன் போட்டி போட்டு போட்­டியில்  மேல் இடத்தைப் பெற்று பிர­பல்­ய­ம­டை­வ­த­னையே குறிக்­கோ­ளா­கவும் லட்­சி­ய­மா­கவும்  கொண்­டுள்­ளார்கள். இதில் வரும் தம்­ப­தி­க­ளுக்கு எவ­ருக்கு IVF சிகிச்சை  செய்­வதில் பய­னுண்டு. எவ­ருக்கு IVF சிகிச்சை கூட பயன்­த­ராது. செய்­வதில்

பலன்  இல்லை என்று ஆராய்ந்து சரி­ யான ஆலோ­சனை வழங்க தவ­ற­வி­டப்ப­டு­கின்­றது. ஆசை  வார்த்­தை­களும், செய்து சரி­

வந்து போன ஒரு சிலரை வைத்து விளம்­பர படங்­களை காட்டுவதும் உண்மைக்கு புறம்­பான வெற்றி சத­வீ­தத்தை கூறு­வதும் அவ­சர அவ­ச­ர­மாக  அவர்­களை சம்­ம­திக்க வைத்து IVF சிகிச்­சை ­க­ளுக்கு ஆளாக்­கு­வதும் நடந்து  வரு­கின்­றது. 

அயல் நாடு­களில் இருந்து வகை தொகை­யாக நாளுக்கு நாள் புதிய புதிய  சிகிச்சை சிறப்­பாக வழங்­கு­கிறோம் வாருங்கள் வாருங்கள் என எமது மக்­களை  துரத்­து­கி­றார்கள். இவற்றில் எவர்கள் சரி­யான தக­வல்­களை சொல்­கி­றார்கள்.  

எவர்கள் சரி­யான சிகிச்­சை­களை வழங்­கு­கின்­றார்கள் என அறி­யாமல் மக்கள்  தடு­மா­று­கின்­றார்கள். முக­வர்கள் கூட மக்­களை ஏற்றி அனுப்­பு­கின்­றார்கள். ஆனால்  தோல்­வியில் முடிந்­த­வர்கள் நிலமை பற்றி யார்தான் சிந்­திப்­பார்கள்.  தோல்­விக்கு என்ன பதில் என்று கேட்டால் பெரும்­பா­லான இடங்­களில் சொல்லும்  பதில் மீண்டும் ஒரு­முறை IVF செய்து பாருங்கள் என்­பதே ஆகும்.  

இந்­த­வே­ளையில் கூட யாரும் ஆராய்ந்து பார்ப்­ப­தில்லை. இந்த IVF  சிகிச்­சையில் இவர்­க­ளுக்கு சரி­வ­ரக்­கூ­டிய வாய்ப்பு எந்த அளவில் உள்­ளது  என்­பதை. ஏனெனில் சில பெண்­களின் கர்ப்­பப்­பையின் நோய்க்கும் தன்­மை­க­ளுக்கும்  அதா­வது தீவி­ர­மான அடிமயோசிஸ் மற்றும் தீவி­ர­மான எண்­டோ­மெற்­றி­யோசிஸ்  நோய்க்கும் IVF சிகிச்­சையில் வெற்றி என்­பது கேள்­விக்­குறியே ஆகும். இவ்­வாறு  வயது கூடிய பெண்­களின் முட்­டை­களில் செய்­யும்­போது வெற்றி எத்­தனை சத­வீதம்  சாத்­தி­யப்­படும்? இப்­படி பெண்­களின் நோய்த்­தன்­மைக்கு ஏற்­ற­வா­றுதான் IVF  முடி­வுகள் அமையும். இதனை கருத்தில் கொண்டு ஒரு பெண்ணை பல சோத­னை­க­ளுக்கும்  செல­வு­க­ளுக்கும் மத்­தியில் IVF சிகிச்­சையை வழங்­கும்­போது பெறு­பே­றுகள் எப்­படி  அமையும் என்­ப­தனை தெளி­வு­ப­டுத்தி அவர்­களை சிந்­திப்­ப­தற்கு சந்­தர்ப்பம்  வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம்.  இவ்­வாறு பல கஷ்­டங்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து IVF சிகிச்­சையை  ஆரம்­பிக்க முன்னர் தகுந்த மருத்­துவ ஆலோ­சனை எடுத்து உங்­க­ளது தனிப்­பட்ட  மருத்­துவ சிக்­கல்­களை மீறி குழந்­தைப்­பாக்­கியம் எத்­தனை சத­வீதம் கைக்­கூடும் என  பார்க்க வேண்டும். 

இவற்றை நன்கு தெரிந்து, நன்கு யோசித்து, சிகிச்சை  முறை­களில் இறங்க வேண்­டி­யுள்­ளது. சில­ரது கர்ப்­பப்பை தொடர்­பான நோய்கள்  கார­ண­மாக IVF முறை மூலம் கூட குழந்­தைப்­பாக்­கியம் வெற்­றிக்­கொள்ள முடி­யாது.  இவற்றை நாம் தெளி­வாக முற்­கூட்­டியே சொல்­லிக்­கொள்­வதன் மூலம்  பய­னற்ற பணச்  செலவு கூடிய சிகிச்சை முறைகளை தவிர்த்துக் கொள்ளலாம்.  

எனவே, குழந்தைப்பாக்கியம் தாமத மடையும் தம்பதிகள் அனைவருக்கும்  IVF சிகிச்சை சரியான இறுதித்தீர்வு அல்ல. சிலரது பிரச்சினைக்கு IVF மூலம் கூட  வெற்றி கொள்ள முடியாதுள்ளது. இதனை தற்போதுள்ள மருத்துவ வசதிகள் மூலம்  கண்டறிந்து முற்கூட்டியே சொல்லக் கூடியதாக உள்ளது. இவ்வாறு IVF க்கும்  வெற்றிகாண முடியாது என அறிந்தால் குழந்தையை தத்தெடுத்தல் கூட ஒரு தீர்வாகக்  கருதலாம்.