சிலம்பரசனின் 'வெந்து தணிந்தது காடு' பட சிங்கிள் ட்ராக் வெளியீட்டு திகதி அறிவிப்பு

By T Yuwaraj

28 Apr, 2022 | 01:56 PM
image

'மாநாடு: என்ற மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தயாராகி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'விண்ணை தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய இரண்டு படங்களில் கூட்டணி அமைத்த சிலம்பரசன்- கௌதம் வாசுதேவ் மேனன்- ஏ ஆர் ரகுமான் என்ற மூவரணி சார்பில் ஹாட்ரிக் கூட்டணியாக பணியாற்றி இருக்கும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் சிலம்பரசன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை சித்தி இத்னானி நடித்திருக்கிறார். 

இவர்களுடன் ராதிகா சரத்குமார், சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சித்தார்த்தா நூரி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு 'ஒஸ்கர் புயல்' ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றதை அடுத்து படத்தில் இடம்பெற்ற சிங்கிள் ட்ராக் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'மாநாடு' வெற்றிக்குப் பிறகு சிலம்பரசன் நடித்திருக்கும் படம் என்பதாலும், 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்திற்கு பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்திருக்கும் காதல் கதை இது என்பதாலும் இப்படத்தின் பாடலுக்கு ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலிடத்தை பிடித்த தனுஷ்

2022-12-08 11:57:54
news-image

தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பேன்- விஷ்ணு விஷால்

2022-12-08 13:08:34
news-image

புனித யாத்திரை மேற்கொண்டிருக்கும் நடிகை மும்தாஜ்

2022-12-08 11:09:50
news-image

யோகி பாபு நடிக்கும் 'மலை' படத்தில்...

2022-12-08 11:04:20
news-image

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ...

2022-12-08 10:43:40
news-image

மண வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கிய ஹன்சிகா

2022-12-07 12:31:12
news-image

பரத் நடிக்கும் 'லவ்' படத்தின் டீசர்...

2022-12-07 11:16:56
news-image

நயன்தாரா நடித்திருக்கும் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட...

2022-12-07 11:14:53
news-image

புதுமுகங்கள் நடிப்பில் தயாரான 'Hi 5'...

2022-12-07 11:04:39
news-image

திரைக்கு வரும் ‘அனல்’

2022-12-06 18:19:32
news-image

நடிகர் கன்னா ரவி நடித்திருக்கும் 'ரத்த...

2022-12-06 11:56:16
news-image

இயக்குநர் பா. ரஞ்சித் பாராட்டிய 'காலேஜ்...

2022-12-06 11:55:41