ஊடகவியலாளர் சமுதித்தவின் வீட்டின் மீதான தாக்குதல் - சி.ஐ.டி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

Published By: Digital Desk 4

28 Apr, 2022 | 01:24 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது, முகத்தை முழுமையாக மறைத்துக்கொண்டு வெள்ளை வேனில் வந்த  அடையாளம் தெரியாதவர்களினால்   மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த விசாரணைகளை உடனடியாக, சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்குமாறு நீதிமன்றம் நேற்று (27) உத்தரவிட்டது.  கெஸ்பேவ நீதிவான்  தமிந்த ராமநாயக்க வெலிகொடபிட்டிய இதற்கான பொலிஸ் மா அதிபருக்கு  பிறப்பித்தார்.

Articles Tagged Under: ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரம | Virakesari.lk

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பான ஊடகவியலாளர்  சமுதித்தவுக்காக நேற்று (27) மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி  சொய்ஸா முன் வைத்த கோரிக்கையை ஏற்று, இந்த உத்தரவை நீதிவான் பிறப்பித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் தனது சேவை பெறுநருக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை என இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சொய்ஸா சுட்டிக்காட்டியிருந்தார்.

இந் நிலையிலேயே உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான 3 சிறப்புக் குழுக்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த  விசாரணைகளை நீதிமன்றம்   சி.ஐ.டி.க்கு மாற்ற உத்தவிட்டுள்ளது.  

முன்னதாக கடந்த பெப்ரவரி  14 ஆம் திகதி அதிகாலை பிலியந்தலை – கேம்பிரிஜ் கோர்ட்  குடியிருப்பு தொகுதியில்  வசிக்கும் சமுதித்தவின் வீட்டின் மீது கற்கள் மற்றும்  மலம் கொண்டு  தாக்குதல் நடாத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறினர்.

சிறிய ரக வெள்ளை வேனில் வந்த நால்வர், குடியிருப்பு தொகுதியின் பிரதான நுழைவாயிலை வலுக்கட்டாயமாக திறந்து அங்கிருந்த பாதுகாப்பு கடமையிலிருந்த ஊழியரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி,  அவரை பாதுகாப்பு  பணிக் கூடத்துக்குள் சிறைப்படுத்தியுள்ளனர். 

அதன்பின்னரே ஊடகவியலாளரின் வீட்டை நோக்கி சென்று இவ்வாறு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளதாக பொலிசார்  தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48
news-image

ஏப்ரல் 28 இல் ஆய்வுக்காக இலங்கை...

2025-03-23 17:55:39
news-image

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் -பாதுகாப்பு...

2025-03-23 21:09:20
news-image

சகல தொழிற்சங்கங்களுடனும் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில்...

2025-03-23 17:49:19
news-image

சுகாதார துறையின் அபிவிருத்தி: ஐ.நா திட்ட...

2025-03-23 20:40:52
news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22