நாடு தழுவிய ரீதியில் இன்று (28) இடம் பெறும் தொழிற் சங்க போராட்டத்தின் ஒரு பகுதியாக திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியும் காணப்படுகிறது. 

அரச உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். 

இதனால் அரச சேவைகள் முடங்கி காணப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் சுகயீன போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என சகல உத்தியோகத்தர்களும் சுகயீன போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.  

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரியே குறித்த போராட்டம் இடம் பெற்றுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் தொழிற் சங்க போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.