தடைச் செய்யப்பட்ட வலையினைப் பயன்படுத்தி கடற்தொழிலில் ஈடுப்பட்ட 56 கடல் தொழிலாளர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கடந்த 3 நாட்களில் மன்னார், சிலாவத்துறை மற்றும் அரிப்பு போன்ற கடற்பிரதேசங்களிலேயே கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின் போது  குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதன் போது கடல் தொழில் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட 18 படகுகள் மற்றும் தடைச்செய்யப்பட்ட வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.