ஜனாதிபதி செயலகத்தின் கம்பி வேலியில் கட்டப்பட்டிருந்த படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பதாதைகளை பொலிஸார் அகற்றியுள்ளனர். 

No description available.

கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் உள்ள 

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் " கோட்டா கோ கம" எனும் அரசுக்கு எதிரான போராட்டத்தில், கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரியே குறித்த ஊடகவியலாளர்களின் பதாதைகள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள கம்பி வேலிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

No description available.

இந்நிலையிலேயே குறித்த ஊடகவியலாளர்களின் பதாதைகள் தற்போது பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.