முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள மக்களும் கலந்துகொள்ள வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன் 

Published By: Digital Desk 4

27 Apr, 2022 | 06:18 PM
image

நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாக இருக்குமேயானால் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள, முஸ்லீம் மக்களும் கலந்துகொள்ளவேண்டுமென வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அவசரக் கடிதம் |  Virakesari.lk

இன்று (27) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல் நிலைமைக்கு காரணமான ஆட்சியாளர்களை வீட்டுக்கு செல் என காலிமுகத்திடல் தொடக்கம் நாடு பூராகவும் போராட்டம் இடம்பெறுகின்றது. 

இந்த போராட்டங்கள் ஜனநாயகரீதியான போராட்டம் என்பதால் எவரையும் கைது செய்யவில்லை. அந்த வகையில் நாமும் இதனை வரவைற்பதோடு போராட்டத்திற்கான ஆதரவை தெரிவிக்கின்றோம்.

அத்துடன் ஜனநாயக ரீதியான இப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு யுத்தகாலத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதனை சகோதர சிங்கள மக்களும் தெரிவித்து வருகின்றனர். இது இந்த நாட்டில் ஏற்பட்ட பாரிய மாற்றமாகும்.

இந்நிலையில் தமிழ் மக்களின் மனங்களில் புரையோடிப்போயுள்ள யுத்த வலிகளை நினைவுகூர்ந்து யுத்தத்தால் மரணித்த தமிழர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் கலந்துகொண்டு அம் மக்களுக்காக அஞ்சலி செலுத்த அழைத்து நிற்கின்றேன் என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மினுவாங்கொடை கல்விக்கோட்டத்திலுள்ள 35 பாடசாலைகள் நவீன...

2023-12-10 23:03:43
news-image

அரசாங்கத்தை பாதுகாக்க சபையில் கூட்ட நடப்பெண்...

2023-12-10 23:05:55
news-image

மட்டக்களப்பு மயிலத்தமடுவில் இடம்பெறும் அத்துமீறல்கள் இன...

2023-12-10 23:01:49
news-image

இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளின்...

2023-12-10 22:58:39
news-image

யாழ். பொற்பதியில் கரையொதுங்கிய படகு!

2023-12-10 22:52:44
news-image

கிண்ணியா அருனலு குளத்தில் 8 வயது...

2023-12-10 18:17:58
news-image

யாழில் வீடு புகுந்து பெண்ணை அச்சுறுத்தி...

2023-12-10 18:32:30
news-image

கொழும்பு BMICHக்கு முன்னால் விளம்பர பலகை...

2023-12-10 17:58:40
news-image

விடுதலைப் புலிகளின் இலச்சினை ஒட்டப்பட்ட முச்சக்கர...

2023-12-10 23:00:05
news-image

மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட...

2023-12-10 23:19:02
news-image

மின் துண்டிப்பு தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை...

2023-12-10 18:04:49
news-image

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு...

2023-12-10 17:05:48