(எம்.மனோசித்ரா)
கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் மொஹம்மது ஹஸ்துன் என்ற நபரின் மனைவியான சாரா ஜெஸ்மின் என்ற பெண்ணின் உயிரிழப்பை உறுதி செய்வதற்காக சாய்ந்தமருது பிரதேசத்தில் 2019 ஏப்ரல் 26 வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் உடல் எச்சங்கள் இன்று தோண்டியெடுக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி சஹரான் ஹசீம் உள்ளிட்ட தற்கொலை குண்டுதாரிகளால் நாட்டிலுள்ள சில கத்தோலிக்க தேவாலயங்களில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டனர்.
இதேபோன்று 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி அம்பாறை - சாய்ந்தமருது பிரதேசத்தில் சஹரான் ஹசீமினுடைய சகோதரனான மொஹமட் ரில்வான் என்ற நபர் வீடொன்றில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த வீட்டில் முதியவர்கள் , சிறுவர்கள் உள்ளிட்ட 17 பேர் காணப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்திருந்தது. இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட டீ.என்.ஏ. பரிசோதனைகளில் 16 பேர் மாத்திரமே குறித்த வீட்டில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த வீட்டில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் குண்டை வெடிக்கச் செய்த மொஹம்மது ஹஸ்து என்ற நபரின் மனைவியான புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜெஸ்மின் என்ற பெண் அங்கு இருக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இரு சந்தர்ப்பங்களில் இது தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த இரு சந்தர்ப்பங்களிலும் குறித்த பெண்ணின் டீ.என்.ஏ. மரபணு அந்த சடலங்களில் இனங்காணப்படவில்லை. அதற்கமைய குற்ற விசாரணைப்பிரிவினர் பரிசோதனைக்காக மீண்டும் குறித்த சடல பாகங்களை தோண்டி எடுப்பதற்கு கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் உத்தரவு கோரியிருந்தனர். நீதிமன்றத்தினால் அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கடந்த 25 ஆம் திகதி முதல் நாளை 29 ஆம் திகதி வரை இவ்வாறு சடலங்களின் பாகங்களை தோண்டியெடுத்து பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய இன்று புதன்கிழமை அம்பாறை பொது மயானத்திலிருந்து சடலத்தின் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.
அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதிபதி, இந்த பரிசோதனைகளின் ஆரம்பத்திலிருந்து தொடர்புபட்டிருந்த சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் பொலிஸார், அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் இதன் போது சம்பவ இடத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.
சடலங்களின் பாகங்கள் தோண்டியெடுக்கப்பட்டு அவற்றில் புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜெஸ்மின் என்ற பெண் குறித்த வீட்டில் இருந்துள்ளாரா என்பது தொடர்பில் மீண்டும் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM