(இராஜதுரை ஹஷான்)
பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் தான் பதவி விலக தயார். ஜனாதிபதியின் அதிகாரத்திற்கமைய நாட்டின் அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்;டதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பதவி விலகுகிறேன்,பதவி விலக தயாராகவுள்ளேன் எவ்வித பிரச்சினையும் கிடையாது.இருப்பினும் பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிக்க தாமதம் ஏற்படுமாயின் நாட்டில் அரச நிர்வாகம் இல்லாமல் போகும்.இடைவெளியை நிரப்புவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்.அக்காலப்பகுதியில் நாடு முழுமையாக அழிவு நிலைக்கு செல்லும் என பிரதமர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி வசமுள்ள நிறைவேற்று அதிகாரத்திற்கமைய நாட்டின் அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என பிரதமரிடம் குறிப்பிட்டோம்.ஜனாதிபதியின் அதிகாரத்திற்கமைய நாட்டை முன்னெடுத்து செல்ல முடியாது.பிரதமர் உட்பட அரசாங்கம் பதவி விலகினால் நாடு ஸ்தீரத்தன்மையை இழக்கும்.
நாடு ஸ்தீரத்தன்மையை இழந்தால் தற்போதைய நிலைமை பாரதூரமான விளைவுகளுக்கு கொண்டு செல்லும் என பிரதமர் தொடர்ந்து குறிப்பிட்டார்.நான் பதவி விலக தயார் ,சந்தேகம் கொள்ள வேண்டாம்.பாராளுமன்றில் உள்ள சகல கட்சிகளையும் ஒன்றினைத்து முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நகர்வு குறித்து ஆராயுங்கள் என குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM