(எம்.எம்.சில்வெஸ்டர்)
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியவராக திகழும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீரரான டு வைன் பிராவோ ஐ.பி.எல். அரங்கில் 1000 ஓட்டமற்ற பந்துகளை (டொட் போல்) வீசியவர் என்ற மைல் கல்லை அடைந்தார்.
மேலும், இந்த மைல் கல்லை எட்டிய 13 ஆவது ஐ.பி.எல். வீரராகவும் பிராவோ பதிவானார்.
ஐ.பில்.எல். அரங்கில் அதிக ஓட்டமற்ற பந்துகளை வீசியவராக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புவ்னேஷ்வர் குமார் விளங்குகிறார்.
139 இன்னிங்ஸ்களில் 516 ஓவர்கள் பந்துவீசியுள்ள புவ்னேஷ்வர் குமார் 1341 பந்துகள் ஓட்டமற்ற பந்துகளாக வீசியுள்ளார்.
இவருக்கு அடுத்தப்படியாக கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன் (1331), ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ரவிச்சந்திரன் அஷ்வின் (1329) ஆகியோர் காணப்படுகின்றனர்.
முதலிடத்திற்காக இவர்கள் மூவர்கள் இடையில் பலத்த போட்டி நிலவி வருகிறது.
இதன் 4 ஆவது முதல் 8 ஆவது இடம் வரையில் ஐ.பி.எல். கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றுள்ள வீரர்கள் உள்ளமை கவனிக்கத்தக்கது.
இதில் ஹர்பஜன் சிங் (1268), லசித் மாலிங்க (1155), அமித் மிஷ்ரா (1154), பியூஷ் சாவ்லா (1151), பிரவீன் குமார் (1076) ஆகியோர் காணப்படுகின்றனர்.
தற்போது ஐ.பி.எல். அரங்கில் விளையாடிவரும் உமேஷ் யாதவ் (1055) 9 ஆவது இடத்தையும், ஜஸ்பிரீட் பும்ரா (1049) 10 ஆவது இடத்தையும் வகிப்பதுடன், ரவீந்திர ஜடேஜா (1037), டேல் ஸ்டேய்ன் (1022) ஆகியோர் இந்த மைல் கல்லை எட்டிய ஏனைய வீரர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM