சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் உணவகம் ஒன்று கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது.
இந்நிலையில், நகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்டனர்.
அதில், அவர்களுக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. 30 ஆண்டுகள் பாரம்பரியமிக்க அந்த உணவகத்தில் சமோசா உள்ளிட்ட பிற பலகாரங்கள் கழிவறையில் வைத்து தயாரிக்கப்பட்டு வந்துள்ளன.
அந்த கழிவறையிலேயே மதிய உணவு உள்ளிட்ட பிற உணவுகளும் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதுதவிர காலாவதியான இறைச்சி மற்றும் பாலாடை கட்டி ஆகியவையும் அந்த உணவகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
அவற்றில் சில 2 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி இருந்தன. பூச்சிகளும், எலிகளும் உணவகத்தில் ஓடி, ஆடியபடி இருந்தன.
30 ஆண்டு பழமையான உணவகத்தின் பணியாளர்களுக்கு சுகாதார அட்டைகள் எதுவும் இல்லை. சட்ட விதிகளை மீறியுள்ளது தெளிவாக அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளது.
இதனை தொடர்ந்து அந்த உணவகம் பூட்டப்பட்டு உள்ளது. சுகாதாரமற்ற முறையில் உள்ள உணவகம் சவுதி அரேபியாவில் மூடப்படுவது என்பது இது முதல் முறையல்ல.
கடந்த ஜனவரியில் ஜெட்டா நகரில் ஷாவார்மா உணவு விடுதியில் எலி ஒன்று அலைந்து கொண்டு இருந்துள்ளது. இறைச்சியை சாப்பிட்டு கொண்டும் இருந்தது.
பிரபல உணவு விடுதியில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி தரும் அந்த வீடியோவை பார்த்த பலரும் சமூக வலைதளத்தில் கொந்தளித்தனர்.
உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை வலியுறுத்தினர். இதனையடுத்து அந்த உணவகத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் மூடினர்.
இதன் எதிரொலியாக பல இடங்களில் 2,833 ஆய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளோம் என சவுதி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அவற்றில் 43 விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. 26 உணவகங்கள் மூடப்பட்டன என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM