அகில இலங்கை ரீதியில் 33 பாடசாலைகள் கலந்துக்கொண்ட தேசிய மெய்வலுனர் போட்டி கண்டி போகம்பரையில் இடம்பெற்றது.

இவ்விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் முஸ்லிம் மாணவியொருவர் இரண்டாம் இடத்தை பெற்றமை அனைவரினதும் கவனத்தையீர்த்துள்ள விடயமாக மாறியுள்ளது.

முஸ்லிம் கலாசார உடையினை அணிந்து இப் போட்டியில் வெற்றிபெற்றமை தொடர்பில் நடுவர் தனது பாராட்டை தெரிவித்திருந்தார்.

கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றிபெற்றமை தொடர்பில் சமுக வலைத்தளங்கள் இம்மாணவி பிரபல்யம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.