இலங்கையின் கடன் நெருக்கடியை போக்க வரிகள் உயர்த்தப்பட வேண்டும் - ஆன் மாரி தெரிவிப்பு

Published By: Digital Desk 3

27 Apr, 2022 | 10:41 AM
image

இலங்கை தனது நாணயக்கொள்கை நடவடிக்கைகளை கடுமையாக்குமாறும் அதன் கடன் நெருக்கடிகளை சமாளிக்க வரிகளை அதிகரிக்குமாறும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் துறைகளின் இயக்குனர் ஆன் மாரி வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பிரதி இயக்குனர் ஆன் மாரி  தெரிவித்துள்ளதாக  ரொய்ட்டர்ஸ்  செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை தனது கடன் நெருக்கடியை சமாளிக்க பணவியல் கொள்கைகளை கடுமையாக்க வேண்டும், வரிகளை உயர்த்த வேண்டும்,  நெகிழ்வான நாணய மாற்று வீதங்களை  பின்பற்ற வேண்டும் என்றும் ஆன் மாரி  தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் பயனுள்ள பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு ள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

22 மில்லியன் மக்கள் தொகையைக்  கொண்ட இலங்கை கடன் நெருக்கடி, மற்றும் உயர்ந்து வரும் பணவீக்கம், இறக்குமதிக்கான அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி என்பவற்றுக்கு மத்தியில் போராடும் நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கோரியுள்ளது.

இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பேச்சு வார்த்தையின் நாம் மிகவும் நல்ல பல பயனுள்ள தொழில்நுட்ப விவாதங்களை நடத்தினோம்  என்றும் ஆன் மாரி  குல்டே  வுல்ஃ ப் தெரிவித்துள்ளார்.

மேலும் நிதி அமைச்சர் அலி சப்ரி கடந்த வாரம் வாஷிங்கடனில் சர்வதேச நாணய நிதியம்,

உலக வங்கி மற்றும் இந்திய உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் உதவிகளையும் கோரியுள்ளார்.

இலங்கை 51 பில்லியன் கடனில் சில பகுதிகளை தற்போது நிறுத்தியுள்ளது. இது தொடர்பில்  ஆன் மாரி குல்டே  வுல்ஃ ப்    கூறுகையில் நிதிகூற்று க்கான தேவையானது கடன் நிலை தன்மையை  நோக்கிய  முன்னேற்ற மாக  இருக்கும் என்பதுடன்  முக்கியமான செலவு  தொகைகளை நிவர்த்திசெய்வதற்கு வரி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் பணவீக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள பணவியல் கொள்கைகளை கடுமையாக்க வேண்டும் என்றும் நெகிழ்வான நாணயமாற்று வீதங்களின் தேவையை  நாங்கள் காண்கிறோம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு வழங்க உள்ள மொத்த நிதி மற்றும் இலங்கையுடன் பேச்சுவாரத்தைகள் நிறைவடையும் காலம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியா லிந்துலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில்...

2024-04-16 16:22:03
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04