நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையை ஸ்தாபிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தல்

Published By: Digital Desk 3

27 Apr, 2022 | 09:21 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் தற்போதைய பொருளாதாரச் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பாராளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளை உள்ளடக்கிய அமைச்சரவையை அல்லது வேறு ஏதெனுமொரு வழிமுறையூடாக பொறுத்தமான இடைக்கால வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

பின்பற்றப்படும் நடைமுறை எதுவாயினும் வேலைத்திட்டமே முக்கியத்துவமுடையதாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு , அதற்காக 8 பிரதான யோசனைகளையும் முன்வைத்துள்ளது.

அதற்கமைய அரசியலமைப்பில் நிறைவேற்றதிகாரத்தை நீக்குதல் அல்லது அதிகாரங்களை மட்டுப்படுத்தல் மற்றும் பாராளுமன்ற அதிகாரத்தை பலப்படுத்தல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொண்டு, அவற்றை உரிய காலத்திற்குள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முதலாவது யோசனையை முன்வைத்துள்ளது.

இரண்டாவது யோசனையில் முதற்பிரிவாக அந்நிய செலாவணியை ஈட்டக் கூடிய வேலைத்திட்டங்களைக் கொண்ட அமைச்சொன்றையும் , அத்தியாவசிய சேவைக்கான அமைச்சொன்றையும் ஸ்தாபிக்குமாறும் பரிந்துரைத்துள்ளது. இரண்டாவது யோசனையின் இரண்டாம் பிரிவில் தற்போதைய நெருக்கடிகளை தீர்ப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதோடு , அதற்காக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுடன் ஒருக்கிணைப்பினைப் பேணுமாறு குறிப்பிட்டுள்ளது.

மேலும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அளவுக்கதிகமான வரப்பிரசாதங்களை வரையறை செய்யுமாறும் , தேர்தலுக்குச் செல்வதற்கு முன்னரான இடைப்பட்ட காலத்தில் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரச சொத்துக்கள் தனியார் மயப்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது அரச சொத்துக்களை மக்கள் பிரதிநிதிகள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தினாலோ அது தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முறைப்பாடளிக்கக் கூடிய வாய்ப்புக்களை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கவும் , அதற்கான பொறுத்தமாக நிலையான  ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்குமாறும் தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

தகுதியற்ற வேட்பாளர்கள் தொடர்பில் நடைமுறைப்படுத்தக் கூடிய பொறுத்தமான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழுவில் முன்வைக்குமாறும் , அநாவசிய செலவுகளை மட்டுப்படுத்தல்  மற்றும் இடைக்கால செயற்பாடுகள் நிறைவடைந்ததன் பின்னர் தேர்தலுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்கு...

2023-12-11 16:58:39
news-image

மலையக மக்கள் குறித்து பேச்சு வார்த்தை...

2023-12-11 16:59:13
news-image

பேலியகொடையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

2023-12-11 17:08:33
news-image

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளை

2023-12-11 17:06:33
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு...

2023-12-11 16:00:40
news-image

பங்களாதேஷ் பெண்ணிடம் கொள்ளையிட்ட இருவர் கைது

2023-12-11 15:57:02
news-image

கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து...

2023-12-11 16:03:35
news-image

அநுராதபுரம், களுத்துறை மாணவிகள் மத்தியில் போதை...

2023-12-11 15:20:09
news-image

பண்டாரகமவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர்...

2023-12-11 15:19:19
news-image

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் தபால்...

2023-12-11 15:46:41
news-image

எல்பிட்டியில் தாயும் மகனும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில்...

2023-12-11 13:47:47
news-image

மசாஜ் நிலையம் எனக் கூறி விபசார...

2023-12-11 13:47:20