குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் வெளிநாட்டுப் பயணங்களை தடை செய்யுமாறு  சட்ட மா அதிபரிடம் கோரிக்கை 

By T Yuwaraj

26 Apr, 2022 | 09:33 PM
image

மோசடி குற்றச்சாட்டுக்கள் மற்றும்  வழக்குகளுக்கு முகம் கொடுக்கும்  முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள்  நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்படுவதாக  தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,  அவர்களின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்து  உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ள  நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபரிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.  

வெளிநாட்டு பயணத் தடைகளை தளர்த்துவதற்கு எப்.சி.ஐ.டி. ஆதரவு | Virakesari.lk

இந்த கோரிக்கை தொடர்பில் சட்ட மா அதிபர் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

சட்டத்தரணிகள் குழுவொன்று, இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை (26) முற்பகல்  சட்ட மா அதிபர் திணைக்களத்தில்  வைத்து சட்ட மா அதிபரை சந்தித்து  இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பில், குறித்த சட்டத்தரணிகள் குழாமில் அங்கம் வகித்த சட்டத்தரணி சுனில் வட்டகல கருத்து தெரிவிக்கையில்,

'மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுக்கும் மற்றும் மேல் நீதிமன்றங்களில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகள், நாட்டில் நிலவும் நெருக்கடி சூழலில் நட்டை விட்டு தப்பிச் செல்ல முற்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அவ்வாறு அவர்கள் தப்பிச் சென்றால், குறித்த வழக்குகளை முன்னெடுத்து செல்வதற்கு தடைகள் ஏற்படுவதுடன், அவ்வாறு நிகழ்ந்தால் அவர்கள் மோசடி செய்த அரச பணம், சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் சாத்தியமற்றுப் போகலாம்.

எனவே தான் அவ்வாறான குற்றச்சாட்டுக்களை உடைய, அரசியல்வாதிகளுக்கு எதிராக நாட்டை விட்டு வெளியேற தடை உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சட்ட மா அதிபரிடம் கோரிக்கை முன் வைத்தோம்.

 சட்டத்தரணிகள் முன் வைத்த இந்த கோரிக்கைக்கு சட்ட மா அதிபர்,  சாதகமான பதிலளிப்பை வழங்கினார்.' என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39