எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் அதிகரிப்பு

By T Yuwaraj

26 Apr, 2022 | 06:52 PM
image

12.5 கிலோ கிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (26) நள்ளிரவு முதல் மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது - லிட்ரோ  நிறுவனம் | Virakesari.lk

அந்த வகையில், 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,860.ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனம் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ளது. அதற்கமைய 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4860 ரூபாவாகவும் , 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1945 ரூபாவாகவும் , 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 910 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளது.

இதற்கு முன்னர் 12.5 லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2675 ரூபாவாகக் காணப்பட்டது. கடந்த ஆண்டு ஒக்டோபரில் லிட்ரோ சிலிண்டரின் விலை 1493 ரூபாவாகக் காணப்பட்டது. இதன் போது லிட்ரோ நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அதன் விலை அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே மீண்டும் குறுகிய கால இடைவெளியில் இவ்வாறு பாரியளவில் லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  மேலும் கடந்த வாரம் லிட்ரோ நிறுவனம் மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 2500 ரூபாவால் அதிககரிப்பதற்கு கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் விலை அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை என்று அரசாங்கம் அறிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right