(எம்.எம்.சில்வெஸ்டர்)
கடந்த இரண்டு தொடர்ச்சியான தோல்விகளைத் தழுவியிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி பானுக்க ராஜபக்சவின் வருகையை அடுத்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 11 ஓட்டங்களால் அவசியமான வெற்றியை பெற்று கொண்டது.
முந்திய போட்டியை விடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசியாக விளையாடியிருந்த 4 போட்டிகளில் 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்தது.
இந்த 3 போட்டிகளும் பானுக்க ராஜபக்ச விளையாடாத 3 போட்டிகளாகும்.
குறிப்பாக இந்த 4 போட்டிகளில் 2 போட்டிகளில் சகல விக்கெட்டுக்களையும், ஒரு போட்டியில் 9 விக்கெட்டுக்களையும், ஒரு போட்டியில் 5 விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது.
இவ்வாறு சகல விக்கெட்டுக்களை இழக்க நேரிடுவது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணியாக அமைவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மேலும்,ஜொனி பெயார்ஸ்டோவுக்கு விளையாடும் பதினொருவரில் வாய்ப்பு அளிக்கப்பட்டதுடன், சிறந்த ஓட்ட வேகத்தை வைத்திருந்த பானுக்க ராஜபக்சவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டமையும் தோல்விக்கு காரணியாக அமைந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இதையடுத்து விளையாடும் அணியில் பானுக்கவின் பங்கு இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்ட பஞ்சாப் நிர்வாகம் இறுதியில் இருவருக்கும் (பானுக்க, பெயார்ஸ்டோ) முந்திய போட்டியில் வாய்ப்பளித்ததுடன் அதற்கு சிறந்த பலனும் கிடைத்தது.
இப்போட்டியில் பஞ்சாப் அணி தனது முதல் விக்கெட்டை 37 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் இழந்தது.
இதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த தவான் பானுக்க இருவரும் தமக்கிடையில் 110 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த இணைப்பாட்டத்தையே கடந்த போட்டிகளில் பஞ்சாப் அணி இழைத்த தவறாகும் என கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனை திருத்திக்கொண்டதாலேயே அவ்வணி இறுதிக்கட்டத்தில் ஓட்டங்களை குவித்தது என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள பானுக்க ராஜபக்ச 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் விளாசியுள்ளதுடன், வெறுமனே 68 பந்துகளில் 125 ஓட்டங்களை குவித்து 183.82 என்ற சிறந்த ஓட்ட வேகத்தையும் வைத்து சிறந்த ஓட்ட வேகம் கொண்ட வீரர்கள் வரிசையில் 7 ஆவது இடத்தில் உள்ளார்.
இதில் பானுக்க ராஜபக்ச உள்ளிட்ட மூவர் மாத்திரமே 100 ஓட்டங்களை கடந்தவர்கள் ஆவர்.
மறுமுனையில், இன்னமும் ஆட்டத்திறனுக்கு வராத பெயார்ஸ்டோவை தட்டிக்கழிக்காமல் அவருக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஏனெனில், எவ்வேளையில் வேண்டுமானாலும் அவர் தனது அதிரடி காட்டக்கூடியவராக இருப்பதே அதற்கு காரணமாகும்.
அவரும் ஆட்டத்திறனுக்கு வந்துவிட்டால், பஞ்சாப் அணியின் துடுப்பாட்ட வரிசை பலம் வாய்ந்ததாக அமைந்து விடும்.
பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் காகிசோ ரபாடா, ஹர்ஷ்தீப் சிங், சந்தீப் சிங் ஆகியோர் துல்லியமாக பந்துவீசி வருவதுடன், சுழற்பந்துவீச்சில் ராகுல் சாஹ்ர் அசத்தி வருகிறார்.
தற்போது அணியில் ரிஷி தவானின் வருகை அணியை சமபலப்படுத்தியுள்ளதுடன்ன், லியம் லிவிங்ஸ்டனின் சகலதுறை ஆட்டம் பஞ்சாப் அணிக்கு மிக முக்கியமான விடயமாக விளங்குகிறது.
இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி 4 வெற்றிகள், 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது.
இவ்வணி பிளே ஓப் சுற்றுக்கான வாய்ப்பை பெறவேண்டுமாயின், எஞ்சியுள்ள 6 போட்டிகளில் 4 போட்டிகளிலாவது சிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM