(எம்.எம்.சில்வெஸ்டர்)

பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழா ஆகியவற்றில் பங்கேற்கவுள்ள இலங்கை ரக்பி குழாம் நேற்றைய தினம் தெரிவு செய்யப்பட்டது.  

இதற்கான அனுமதியைப் பெறுவதற்கான ஆவணம் விளையாட்டுத்துறை அமைச்சர் தேனுக்க விதானகமகேவிடம்  கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பெயரிடப்பட்டுள்ள 12 பேர் அடங்கிய இலங்கை ரக்பி  அணிக்கு கண்டி ரக்பி அணியின் ஸ்ரீநாத் சூரிய பண்டார தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

 இந்த 12 வீரர்களைத் தவிரவும் மேலதிக 8 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

கொழும்பு சீ.ஆர். மைதானத்தில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற அணிக்கு 7 பேர் கொண்ட ரக்பி போட்டித் தொடரில் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்த 12 பேர் ரக்பி குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளதுடன், மேலதிகமாக 8 பேரும் இலங்கை ரக்பி குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். 

இலங்கை ரக்பி குழாம் விபரம்

ஸ்ரீநாத் சூரியபண்டார (அணித்தலைவர்), தரிந்த ரத்வத்தே, நைஜில் ரத்வத்தே,  தனுஷ் தயான், கவிந்து பெரேரா, புத்திம பிரியரத்ன, மிதுன் அப்புகொட , ரீசா ரபாய்டீன்,  அதீஷ வீரதுங்க, சத்துர செனவீரத்ன, அஞ்சுல ஹெட்டி ஆரச்சி, சுதர்ஷன திக்கும்பு.

மேலதிக வீரர்கள்  விபரம்

திலுக்ச தங்கே, ஹேஷான் தன்சே, ரமேஷ்  பெர்னாண்டோ,  லசிந்து இஷான்,  சுதஹம் சூரியஆரச்சி, அவிஷ் லீ, ஒவின் ஹெட்டிஆரச்சி, இரோஷன் சில்வா.