நள்ளிரவு வேளையில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தையடுத்து பாரிய சத்தம் ஒன்றும் கேட்டது. உடனடியாக வெளியில் ஓடிவந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மதிலில் மோதி இரத்த வெள்ளத்தில் கிடந்ததை காணமுடிந்தது என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் பிரதேச வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் நேற்று  நள்ளிரவு வேளையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பல்கலைக்கழக மாணவர் இருவர் மதிலில் மோதி இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த காட்சியை பார்த்த ஒருவரே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் பிரதேசவாசி மேலும் கூறியுள்ளதாவது;

நேற்று நள்ளிரவு துப்பாக்கி வேட்டு சத்தம் கேட்டது. அதனை தொடர்ந்து பாரிய சத்தமும் கேட்டது. நாம் உடனே வெளியே ஓடிவந்து பார்த்தோம். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் மதிலுடன் மோதுண்டு இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தார்கள். 

விபத்து நடந்து சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு பொலிசாரும் வந்திருந்தனர் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொருவர் கூறியுள்ளதாவது;

 நள்ளிரவு பெரிய சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்தேன். மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதுண்ட நிலையில் இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.

இதன்போது பொலிஸார் இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

சி.சி.ரி.வி கமராவில் பதிவான காட்சி

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அரு கில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப் பட்டி ருந்த சி.சி.ரி.வி. கமராவில் இரவு 11.45

மணியளவில் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் அந்த கடையை தாண்டி செல் கின்றது. அதன் பின்னர் இரு நிமிடத்தில் 11.47 மணியளவில் மழையங்கி அணிந்த வாறு பொலிஸ் குழு ஒன்று அந்த கடையை

கடந்து நடந்து செல்லும் காட்சி பதிவாகி யுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.