‘‘டுவிட்டர் எதிர்காலம் நிச்சயமற்றது’’ - தலைமை நிறைவேற்று அதிகாரி பராக் அகர்வால்

By T. Saranya

26 Apr, 2022 | 12:07 PM
image

டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது, டுவிட்டர் கைமாறும் நிலையில் அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது என அதன் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார். 

டுவிட்டர் நிறுவனம் கைமாறும் நிலையில் இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார். 

ஊழியர்களின் கூட்டம் ஒன்றில் பேசிய பாரக் அகர்வால் கூறுகையில் ‘‘டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது.  டுவிட்டர் கைமாறும் நிலையில் அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது’’ எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே டுவிட்டர் ஊழியர்களுடன் கேள்வி-பதில் அமர்வில் எலான் மஸ்க் பங்கேற்பார் என தெரிகிறது. இதனை ஊழியர்களிடம் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right