மிஷ்கினின் 'பிசாசு 2' டீசர் வெளியீட்டு திகதி அறிவிப்பு

By T Yuwaraj

25 Apr, 2022 | 10:11 PM
image

நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'பிசாசு 2' படத்தின் டீசர் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'பிசாசு' படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். இந்த பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை பூர்ணா, நடிகர் சந்தோஷ் பிரதாப், ராஜ்குமார் பிச்சுமணி, நமீதா கிருஷ்ணமூர்த்தி, அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. முருகானந்தம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இந்த ஹாரர் ஜேனரிலான திரைப்படத்திற்கு இளைய இசைஞானி கார்த்திக் ராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர், ஏப்ரல் மாதம் 29ஆம் திகதியன்று மாலை 5 மணியளவில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் திரைஉலகில் ஆவியை நகைச்சுவையாகவும், எதிர்மறையாகவும் காட்சிப்படுத்தியிருக்கும் படைப்பாளிகளுக்கு மத்தியில் ஆவி, பேய், பிசாசு போன்ற அமானுஷ்யங்களை நேர்மறையான கதாபாத்திரங்களாக வடிவமைத்து பார்வையாளர்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். அவரது பிசாசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிசாசு 2 விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப்படமும் முதல் பாகத்தைப் போலவே வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right