சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் கலந்துரையாடல்கள் சீனாவிடமிருந்து  கோரப்பட்டுள்ள 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறும் இலங்கையின் முயற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சீனாவின் தூதுவர் கியீ ஷென் வொங் தெரிவித்தார்.

New year Greetings : Message from Qi Zhenhong, Ambassador of China -  Colombo Times

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் புரிந்துகொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை சீனா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் இதன் போது சீன தூதுவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் செய்தியாளர்கள் சிலரை திங்கட்கிழமை (25) சந்தித்து உரையாற்றுகையிலேயே சீன தூதுவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின்  தற்போதைய பேச்சுவார்த்தைகள் உத்தேச 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் குறித்த  சீனாவுடனான பேச்சுவார்த்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதே போன்று இலங்கைகான சீனாவின் ஆதரவு குறிப்பிட்ட கட்சி அல்லது அரசாங்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்காது  மாறாக மக்கள் நலன்களை மையப்படுத்தியதாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதார வேலைத்திட்டத்தில் அதிகாரிகளுடன் நெருக்கமாகச் செயற்படுவதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. 

இந்த வாரம் ஒரு அறிக்கையை வெளியிட்ட சர்வதேச நாணய நிதியம்  நெருக்கடியின் சரியான நேரத்தில் தீர்வுக்கு ஆதரவாக அனைத்து பங்குதாரர்களுடனும் ஈடுபடும் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.