(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் காப்பகத்தில், வழக்குப் பொருளாக இருந்த ஹெரோயின் போதைப் பொருளினை கடத்தி விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், அவ்வழக்குப் பொருள் காப்பகத்தின் பொறுப்பாளராக செயற்பட்ட உத்தியோகத்தரை கைது செய்ய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
![]()
தற்போது குறித்த உத்தியோகத்தர் தலைமறைவாகியுள்ள நிலையில், சிறப்பு குழுவூடாக அவரைக் கைது செய்ய தேடி வருவதாக பி.என்.பீ. எனும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் நீதிமன்றுக்கு அளித்துள்ள அறிக்கை பிரகாரம் குறித்த சம்பவம் வருமாறு :
கடந்த 21 ஆம் திகதி பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் வெல்லம்பிட்டி பகுதியில் வைத்து 48 கிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, அந்த ஹெரோயின், கொத்தட்டுவ பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் ஊடாக தனக்கு கிடைத்ததாக சந்தேக நபர் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தினருக்கு தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் சந்தேக நபரின் தொலைபேசி ஊடாக, சந்தேக நபரைக் கொண்டே பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு அழைப்பெடுத்து, கொத்தட்டுவ பகுதியில் வாகன தரிப்பிடம் ஒன்றுக்கு பொலிஸ் கான்ஸ்ட்பிளை வரவழைத்து போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அப்போது அவரிடம் இருந்து 750 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே பொலிஸ் கான்ஸ்டபிலிடம் முன்னெடுத்த விசாரணைகளில், அவருக்கு குறித்த போதைப் பொருள் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் காப்பக பொறுப்பாளர் ஊடாக கிடைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
அவரைக் கைது செய்ய பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார்.
இந் நிலையிலேயே அது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM