ரம்புக்கனை  சம்பவம் :  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், பொறுப்பதிகாரியை விசாரிக்க சி.ஐ.டி. சிறப்புக் குழு

Published By: Dinesh Silva

25 Apr, 2022 | 06:09 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கேகாலை மாவட்டம் - ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை  துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்தமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.   

Articles Tagged Under: சி.ஐ.டி | Virakesari.lk

குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின்  125 ஆவது அத்தியாயத்துக்கு அமைய, பொலிஸ் மா அதிபர் சந்தன  விக்ரமரத்ன, சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்னவுக்கு  விசாரணைகளை சி.ஐ.டி.யிடம் கையளித்த நிலையில், சி.ஐ.டி. யின் பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் அவ்விசாரணைகள் இடம்பெறுகின்றன.

 இந் நிலையில் குறித்த விசாரணைகளில் ஒரு அங்கமாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்த உத்தரவிட்டது யார் என்பதை துல்லியமாக வெளிப்படுத்திக்கொள்ள,  குறித்த சம்பவம் பதிவாகும் போது கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக இருந்த அதிகாரியிடமும், ரம்புக்கனை பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்தவரிடமும் விசாரணைகளை முன்னெடுக்க சி.ஐ.டி. நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த இரு அதிகாரிகளுக்கு மேலதிகமாக ரம்புக்கனை பகுதிக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அத்தியட்சரின் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்ளவும் சி.ஐ.டி. நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

 குறித்த மூன்று அதிகாரிகலும் தற்போது, பொலிஸ்  மேலதிக படை தலைமையகத்துக்கு இடமார்றப்பட்டுள்ள நிலையிலேயே, அவர்களை சி.ஐ.டி. க்கு அழைத்து வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06
news-image

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவராக முன்னாள்...

2025-02-12 18:13:43
news-image

தையிட்டி விகாரை விடயத்தில் சட்ட ஆட்சி...

2025-02-12 17:19:27
news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:49:09
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு “டவர் நாடக...

2025-02-12 18:12:00
news-image

புறக்கோட்டை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3...

2025-02-12 16:21:35
news-image

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

2025-02-12 15:55:39
news-image

200 அடி பள்ளத்தில் விழுந்து கார்...

2025-02-12 15:40:01
news-image

வாழைச்சேனை - ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

2025-02-12 15:22:06
news-image

வளிமாசடைவால் கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து -...

2025-02-12 15:06:58