பனிக்கட்டிகளுக்கு கீழ் நீந்தி கின்னஸ் சாதனை படைத்த பெண் !

By Digital Desk 5

25 Apr, 2022 | 04:04 PM
image

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பெண் தற்போது இரண்டாவது முறையாக நீச்சலில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஒருவர், பனிக்கட்டிகளுக்கு அடியில் 295 அடி 3 இன்ச்  தூரம் நீந்தி புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

அம்பெர் ஃபிலாரி (Amber Fillary) என்ற பெண் நீச்சலில் அதீத ஆர்வம் கொண்டவர்.

பனிக்கட்டிகளுக்கு கீழ் 295 அடி 3 இன்ச் தூரம் நீச்சல் அடித்து சாதனை புரிந்துள்ள இவர், இரண்டு வருடங்களுக்கு முன் நோர்வேயில் 229 அடி 7.9 இன்ச் தூரம் நீச்சல் அடித்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார். 

Amber Fillary breaks her record for longest swim under ice | Guinness World  Records

பனிக்கட்டிகளுக்கு அடியில் அவர் நீச்சல் அடிக்கும் போது துடுப்புகளையோ அல்லது டைவிங் சூட்டையோ பயன்படுத்தவில்லை என்பது தான் இப்போதைய சாதனையின் கூடுதல் சிறப்பு. இது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

மேலும், நீச்சலில் சாதனைபெற்ற பெண் இது குறித்து தெரிவித்த போது,

”சிறு வயதில் இருந்தே நீச்சலடிப்பது மிகவும் பிடிக்கும். ஃபிக் ப்ளூ படம் பார்த்த பிறகு ஃப்ரீ டைவிங் மீது ஆர்வம் அதிகமானது. அதன்பிறகு தான் இதைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். 

இப்படித்தான் தொடங்கியது என் பயணம். கடுமையான மன அழுத்தத்தில் இருந்தேன். தற்போது அதிலிருந்தும் மீண்டு வந்துள்ளேன்” என்றார்.

இவர் ஊக்கப்படுத்தும் பேச்சாளராக (motivational speaker ) உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனைவி­யரை உலகக் கிண்ண போட்டிக்கு அழைத்துச்செல்ல...

2022-10-07 10:13:59
news-image

பரபரப்பான போட்டியில் இந்தியாவை 9 ஓட்டங்களால்...

2022-10-07 09:52:33
news-image

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பாக நேபாள...

2022-10-06 19:06:10
news-image

17 வயது ரசிகை பாலியல் வன்கொடுமை...

2022-10-06 14:50:18
news-image

இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்திற்கு...

2022-10-06 11:48:30
news-image

8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப்...

2022-10-06 11:16:02
news-image

இனி ஒருபோதும் கிரிக்கெட் விளையாட முடியாது-...

2022-10-05 17:23:59
news-image

ருசோவ் அபார சதம் : தென்னாபிரிக்காவுக்கு...

2022-10-05 09:19:09
news-image

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர்...

2022-10-04 21:17:20
news-image

இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல, குமார் தர்மசேன...

2022-10-04 16:01:06
news-image

மகளிர் இருபது 20 ஆசியக் கிண்ண...

2022-10-03 11:55:48
news-image

துடுப்பாட்டத்தில் மாலன், பந்துவீச்சில் வோக்ஸ் அசத்தல்...

2022-10-03 09:45:51