யாழ்.நகரப்பகுதியில் வைத்து தண்ணீர் ஊற்றி விரட்டியடிக்கப்பட்ட யாசகரை கைதடியிலுள்ள முதியோர் இல்லம் பொறுப்பெடுத்துள்ளது.

கடந்த வாரம் யாழ் நகரிலுள்ள உணவகமொன்றின் முன்பாக யாசகர் ஒருவரை உணவகத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் நீர் ஊற்றி துரத்தும் காணொளி காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகியிருந்தது.

குறித்த கடை முன்பாக யாசகம் பெற்றுவந்த வயோதிபரை கடையில் வேலை செய்யும் நபர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்குடன், நீரினை அவர் மீது ஊற்றி அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில் குறித்த யாசகரை கைதடியிலுள்ள முதியோர் இல்லம் பொறுப்பெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.