இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எடுத்துள்ள தீர்மானம்

25 Apr, 2022 | 11:57 AM
image

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தனது டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விரிவான கலந்துரையாடலுக்கு பின்னர், அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரும் பட்சத்தில் அதற்கு ஆதரவாக வாக்களிக்க ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்  ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னதாக அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாபிரேரணை வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right