பல்வேறு திட்டமிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு பொலிசாரினால் தேடப்பட்டு வரும் இரு முக்கிய சந்தேக நபர்களுடன் தொடர்பிலிருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து கைது செய்யப்பட்ட இந்த குழுவினர் கப்பம் கோரிய விவகாரமொன்றில் வர்த்தகர் ஒருவரை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹீனயட்டியன பிரதேசத்தில் குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்கள் 32, 37, 38 மற்றும் 42 வயதான கொட்டுகொட மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
மேலும் குறித்த நபர்களிடமிருந்து உள்நாட்டு துப்பாக்கி, வெளிநாட்டில் தயாரிக்கபட்ட 2 கைத்துப்பாக்கிகள், கைக்குண்டு மற்றும் 7 கிராம் 800மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களை விசாரணைக்குட்படுத்தியதில் அவர்கள் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் சர்வதேச குழுவொன்றுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM