“மெய்ப்பட செய்” ஓடியோ வெளியீட்டு விழா

Published By: Digital Desk 5

25 Apr, 2022 | 11:19 AM
image

இசை அமைப்பாளர் பரணி சிறிய இடைவெளிக்கு பிறகு இசை அமைத்திருக்கும் 'மெய்ப்பட செய்' படத்தின் ஓடியோ வெளியாகியிருக்கிறது. இதனை தயாரிப்பாளர் கே. ராஜன் வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் வேலன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் 'மெய்ப்பட செய்'.

 இதில் புதுமுகம் ஆதவ் பாலாஜி கதையின் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை மதுநிக்கா நடித்திருக்கிறார்.

 இவர்களுடன் ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபாலன், ஓஏகே சுந்தர், சூப்பர் கட் சுப்பிரமணி, விஜய கணேஷ், ராகுல் தாத்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஆர் வேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரணி இசை அமைத்திருக்கிறார். 

எஸ். ஆர். ஹர்ஷித் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி. ஆர். தமிழ்ச்செல்வம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' சுயநலத்திற்காக பல படுபாதக செயல்களை செய்து விட்டு அதிகாரத்தையும், சட்டத்தில் இருக்கும் சலுகைகளையும் பயன்படுத்தி மக்களுடன் மக்களாக இரண்டறக் கலந்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகவும், பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் 'மெய்ப்பட செய்' தயாராகியிருக்கிறது. 

'பார்வை ஒன்றே போதுமே' என்ற படத்தை பார்த்த பின்னர் அதில் இசை அமைப்பாளராக பணியாற்றி பரணி அவர்களுடன் முதல் படத்தில் பணியாற்ற வேண்டும் என விரும்பினேன். இதற்காக அவரை சந்தித்து சம்மதம் கேட்டவுடன், உடனே ஒப்புக்கொண்டார். 

இந்த படத்திற்காக அவர் கடுமையாக உழைத்து அற்புதமான பாடல்களை வழங்கியிருக்கிறார்.'' என்றார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. 

வெளியீட்டு திகதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இசை அமைப்பாளர் பரணி சிறிய இடைவெளிக்குப் பிறகு இசையமைத்திருப்பதால் இந்தப் படத்தின் பாடல்களுக்கான எதிர்பார்ப்பு இணையவாசிகளிடம் ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right