ரஷ்ய நிலக்கரிக்கு பேரம் பேசும் சீனா

25 Apr, 2022 | 11:19 AM
image

உக்ரைனில் நடந்த போரை சாதகமாகப் பயன்படுத்தி ரஷ்யகோக்கிங் நிலக்கரி இறக்குமதியை இரட்டிப்பாக்க முயற்சிக்கறது.

 இதன் மீதான இறக்குமதி மார்ச் மாதத்தில் 1.4 மில்லியன் டொன்னாக உயர்ந்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற  கொள்வனவாளர்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த அல்லது தடை செய்ய வழிவகுத்தது.  

இந்த நிலையில் மொஸ்கோவுடன் இணைந்து பணியாற்றஸறும் பெய்ஜிங்கின் விருப்பம் மேற்குலகில் விரக்தியை ஏற்படுத்தும் என ராய்ட்டர்ஸ் செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, நிலக்கரி இறக்குமதி ஆண்டுக்கு 31 சதவீதம் சரிந்ததுள்ளது.

 இது மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் அனல் நிலக்கரிக்கான தேவை வீழ்ச்சியாகும். 

 நிலக்கரி என்பது சீனாவில் மிகவும் பொதுவான எரிசக்தி மூலமாகும்.

 சமீபத்திய தசாப்தங்களில் பயன்பாட்டைக் குறைப்பதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும் மொத்த நுகர்வில் பாதிக்கும் மேலானதாகவே இன்னும் உள்ளது.

சீனா உள்நாட்டு நிலக்கரிச் சுரங்கத்தை முடுக்கிவிட நடவடிக்கை எடுத்தாலும், வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் சீனா உள்ளது. 

மேற்குலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிலிருந்து எரிசக்தி இறக்குமதியை மேலும் அதிகரிக்க சீன அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

கடந்த மாதம் ரஷ்யாவிலிருந்து 321,380 டொன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்தது.

 மொஸ்கோவுடன் இணைந்து பணியாற்ற பெய்ஜிங்கின் விருப்பம் மேற்குலக நாடுகளில் விரக்தியை ஏற்படுத்தும், ஏனெனில் இது கடந்த இரண்டு மாதங்களில் தொடங்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் செயல்திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்திரேலியாவில் ஆபத்தான கதிரியக்க பொருளுடன் கப்ஸ்யுல்...

2023-01-28 13:20:36
news-image

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டுக்கு சீனா,...

2023-01-28 12:32:23
news-image

இந்தியாவின் அபாரமான பொருளாதார வளர்ச்சியை பாகிஸ்தான்...

2023-01-28 11:10:38
news-image

வெளியானது கறுப்பின இளைஞரை பொலிஸார் கண்மூடித்தனமாக...

2023-01-28 10:02:07
news-image

ஜெரூசலேமில் யூதவழிபாட்டுதலத்தில் துப்பாக்கி பிரயோகம் -...

2023-01-28 05:06:32
news-image

கூகுளில் இருந்து 12,000 பணியாளர்கள் பணி...

2023-01-27 16:35:43
news-image

ஈரானிலுள்ள அஸர்பைஜான் தூதரகத்தில் துப்பாக்கிச் ‍சூட்டில்...

2023-01-27 15:30:03
news-image

பரீட்சை முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல...

2023-01-27 15:07:56
news-image

பிரிட்டனில் இரு பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய பின்,...

2023-01-27 13:27:35
news-image

சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில்...

2023-01-27 13:11:09
news-image

மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி...

2023-01-27 12:15:12
news-image

இந்திய மக்கள் மனநிலை குறித்த கருத்துக்...

2023-01-27 12:20:05