வீரகேசரி நிறுவனத்தின் ஊடகவியலாளரும் கேலிச்சித்திர ஓவியருமான அஸ்வின் சுதர்சனின் இறுதிக் கிரியைகள் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் மாதகலில் இடம்பெறவுள்ளது.
கார்ட்டூனிஸ்ட் அஸ்வின் என அழைக்கப்படும் யாழ். மாதகலைச் சேர்ந்த சிரேஷ்டகார்ட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன், கடந்த மாதம் 22 ஆம் திகதி உக்ரேன் நாட்டில் வைத்து ஏற்பட்ட திடீர் வயிற்று வலி காரணமாக போதிய சிகிச்சைகளின்மையால் உயிரிழந்தார்.
தமிழரின் உரிமைகளை வலியுறுத்தியும், சமகால அரசியல் நிலைமைகளை உணர்த்தும் வகையிலும் கார்ட்டூன் சித்திரங்களை வரைந்து பலரதும் கவனத்தையும் ஈர்த்த அஸ்வின் சுதர்சனின் வீரகேசரி நிறுவனத்தில் பணியாற்றியது போது பத்தி எழுத்துக்கான விருதையும் பெற்றார்.
அஸ்வினின் பூதவுடல் நேற்று இரவு நாட்டு கொண்டுவரப்பட்டதோடு அவருடைய சொந்த இடமான யாழ்ப்பாணம் மாதகலில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை நான்கு மணியளவில் மாதகல் புனித செபஸ்ரியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு பின்னர் பூதவுடல் புனித செபஸ்ரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM