(என.வீ.ஏ.)
இந்த வருட ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறி வரும் முன்னாள் சம்பியன் மும்பை இண்டியன்ஸ் தொடர்ச்சியாக தனது 8 ஆவது தோல்வியைத் தழுவியது.
நடப்பு ஐபிஎல் அத்தியாயத்தில் மும்பை இண்டியன்ஸ் மாத்திரமே இதுவரை ஒரு வெற்றியையும் ஈட்டாமல் இருக்கின்றது.
மும்பை வான்கடே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் கே. எல். ராகுல் குவித்த ஆட்டமிழக்காத சதம், க்ருணல் பாண்டியா பதிவுசெய்த 3 விக்கெட் குவியல் ஆகியவற்றின் உதவியுடன் மும்பை இண்டியன்ஸை 36 ஓட்டங்களால் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றிகொண்டது.
ராகுல் குவித்த சதம் மும்பைக்கு எதிராக அவர் பெற்ற 3ஆவது சதமாகும். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்கு எதிராக 3 சதங்கள் குவித்தவர் என்ற சாதனையை ராகுல் படைத்தார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.
மிகவும் திறமையாக துடுப்பெடுத்தாடிய ராகுல் 62 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்ட்றிகள், 4 சிக்ஸ்களுடன் 103 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.
ராகுலுக்கு அடுத்ததாக மனிஷ் பாண்டே பெற்ற 22 ஓட்டங்களே லக்னோ இன்னிங்ஸில் இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.
பந்துவீச்சில் கீரன் பொலார்ட் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரைலி மெரெடித் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
169 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் ரோஹித் ஷர்மா (39), திலக் வர்மா (38) ஆகிய இருவரே 35 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். கீரன் பொலார்ட் 19 ஓட்டங்களைப் பெற வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை நெருங்கவில்லை.
பந்துவீச்சில் க்ருணல் பாண்டியா 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM