பரீட்சைகளை ஒத்திவைத்தது வடமாகாண கல்வித் திணைக்களம்

By T Yuwaraj

24 Apr, 2022 | 09:56 PM
image

ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுப்பு போராட்டத்தை நடத்த உள்ளதனால் நாளை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலமைக்கு தீர்வாக பாடசாலை மாணவர்களை அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அனுப்புமாறும் ஆசிரியர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளுமாறும் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்தும் ஆசிரியர்கள், அதிபர்கள் நாளை சுகயீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த நிலையில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் 2021ஆம் ஆண்டு தரம் 6,7 மற்றும் 8 ஆகிய மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்பட்டு வருகிறது.

எனினும் நாளை ஏப்ரல் 25ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகள் வரும் 27ஆம் திகதி புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

எனினும் கடந்த 20ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சை நாளைமறுதினம் ஏப்ரல் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் நடைபெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right