(எம்.மனோசித்ரா)
பொலிஸ்மா அதிபர் , பொலிஸார் ஏனைய பாதுகாப்புபடையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலேயே செயற்பட வேண்டும். அதற்கமைய அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான அவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பல வீதிகளில் கடினமான வீதித்தடைகள் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சட்டத்தரணிகள் சங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
கொழும்பை அண்மித்துள்ள ஒரு சில வீதிகளில் நேற்றைய தினம் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடைகளில் கூரிய ஆணி போன்ற கம்பிகளை பொருத்தி கறுப்பு நிற பொலித்தீனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்களுக்கு பாரிய காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் நிலவுகின்றமை தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
பொலிஸ்மா அதிபர், பொலிஸார் மற்றும் படையினர் எந்தவொரு நிலைமையின் கீழும் எதிர்ப்பில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கும் உள்ள மக்களின் உரிமையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதேனும் வன்முறை சூழல் ஏற்பட்டால் அது நாட்டிற்கு பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM