(லியோ நிரோஷ தர்ஷன்)

ஆமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று  ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார். இரு நாட்கள் வரையறுக்கப்பட்டுள்ள இந்த விஜயத்தின் போது அங்கு பல சந்திப்புகளை முன்னெடுக்க உள்ளதுடன் நல்லூர் கந்த சுவாமி கோவிலுக்கும் விஜயம் செய்து சிறப்பு வழிப்பாடுகளில் ஈடுப்பட உள்ளார்.

இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் பின்னர் இங்கு இராஜதந்திர பணிகளை பொறுப்பேற்ற தூதுவர் ஜுலி சங் கொழும்பில்  பல்வேறு சந்திப்புகளில் கலந்துக் கொண்டிருந்தார். இலங்கையில் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர்  அவரது முதலாவது வெளி  மாகாணத்திற்கான விஜயமாக  வட மாகாணம் அமைந்துள்ளது.

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா,  முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கிணேஷ;வரன் மற்றும் யாழ் ஆயர் உட்பட சிவில் சமூகத்தினரையும் சந்தித்து இதன் போது கலந்துரையாட உள்ளார். அதே போன்று யாழ். நூலகத்திற்கும் விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.